Advertisement

ரஷ்யாவில் அரசியல் சாசன திருத்த ஓட்டெடுப்பு தொடக்கம்

By: Nagaraj Thu, 25 June 2020 9:49:56 PM

ரஷ்யாவில் அரசியல் சாசன திருத்த ஓட்டெடுப்பு தொடக்கம்

அரசியல் சாசன திருத்த ஓட்டெடுப்பு தொடக்கம்... 20 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக தொடரும் புடின், தன்னையே அடுத்த இரண்டு முறையும் அதிபராக தேர்வு செய்யும் வகையில் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வந்து இன்று (ஜூன் 25) ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளார்.

ரஷ்ய அதிபர் பதவிக் காலம், ஆறு ஆண்டுகள். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், இருமுறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, இரு முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புடின், அதன் பின், பிரதமராக பதவி வகித்தார். பின், 2012ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இவர் பதவிக்காலம், 2024ல் முடிகிறது. அதன் பிறகு பதவியில் தொடர சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரியில் அரசியல் சாசன சட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதில் 2024-க்கு பிறகு அடுத்த இரண்டு முறையும் தானே அதிபராக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளார். மேலும் நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமிக்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

condemnation,referendum,russian chancellor,parliament ,கண்டனம், ஓட்டெடுப்பு, ரஷ்ய அதிபர், பாராளுமன்றம்

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஏப்ரல் 22-ல் இதற்கான பொது ஓட்டெடுப்பு நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஓட்டெடுப்பு தடைபட்டது.பின்னர் ஜூலை முதல் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன் கூட்டியே இன்று (ஜூன் 25) ஓட்டெடுப்பு துவங்கியது. கொரோனா பரவலை தடுக்க கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முன் கூட்டியே ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சீர்திருத்தம் புடினை வாழ்நாள் அதிபராக்க அனுமதிக்கும் என அரசின் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags :