Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு

By: Karunakaran Tue, 29 Sept 2020 09:30:59 AM

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

belarusian,opposition leader,french president,emanuel macron ,பெலாரஷ்யன், எதிர்க்கட்சித் தலைவர், பிரெஞ்சு ஜனாதிபதி, இம்மானுவேல் மக்ரோன்

எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா போலாரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

தற்போது, நேட்டோ படைகளின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று லுதுவேனியா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டருக்கு ரஷியா ஆதரவு அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற ஸ்வியாட்லானா திட்டமிட்டுள்ளார்.


Tags :