Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ அறிவிப்பு

ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ அறிவிப்பு

By: Karunakaran Thu, 17 Sept 2020 10:35:46 AM

ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ அறிவிப்பு

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அங்கு 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலிலும், அலெக்சாண்டர் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை எனவும் அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

belarus,president alexander lukashenko,arms aid,russian president ,பெலாரஸ், ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆயுத உதவி, ரஷ்ய ஜனாதிபதி

நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சூழ்ச்சியே காரணம் என அதிபர் அலெக்ஸ்சான்டர் குற்றம் சுமத்தி வருகிறார். உள்நாட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் கடந்த 15 ஆம் தேதி பெலாரஸ் அதிபர் ரஷியா பயணம் மேற்கொண்டு, ரஷிய அதிபர் புதினை அலெக்ஸ்சாண்டர் சந்தித்தார். அப்போது, பெலாரசின் பொருளாதார பிரச்சனைகளை சரிகட்ட உடனடியாக 1.5 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினிடம் தான் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் அலெக்ஸ்சாண்டர் கூறுகையில், நாம் பெலாரஸ் நாட்டிற்குள் மட்டுமல்லாமல் எல்லைப்பகுதியிலும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நான் ரஷிய அதிபர் புதினிடம் சில புது வகையான ஆயுதங்களை கேட்டுள்ளேன். ரஷியாவும், பெலாரசும் இணைந்து ராணுவ ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற ராணுவ ஒத்திகைகளை இரு நாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags :