Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை

பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை

By: Karunakaran Tue, 15 Sept 2020 2:50:22 PM

பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து தனிநாடாக அறிவிக்கப்பட்ட பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அங்கு அதிபர் தேர்தல்
நடைபெற்றபோது, அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி பெற்றார். அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலிலும் 80.23 சதவிகித வாக்குகளை பெற்ற அலெக்சாண்டர், 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.

belarus,lukashenko,russia,vladimir putin ,பெலாரஸ், லுகாஷென்கோ, ரஷ்யா, விளாடிமிர் புடின்

போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் பெலாரஸ் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறி அதிபர் அலேக்ஸ்சான்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனால் பெலாரசை பாதுகாக்க ரஷியா உதவ வேண்டும் எனவும் அலேக்ஸ்சாண்டர் கோரிக்கை விடுத்தார். அதன்பின், பெலாரசுக்கு தேவைப்படும்போது ராணுவ ரீதியிலான உதவிகளை செய்வதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.

இந்நிலையில், போராட்டங்கள் நடைபெறத்தொடங்கிய பின்னர் முதல் முறையாக பெலாரஸ் அதிபர் நேற்று வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதிபர் அலேக்ஸ்சாண்டர் நேற்று ரஷிய நாட்டிற்கு சென்று, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பெலாரசின் பொருளாதார பிரச்சனைகளை சரிகட்ட உடனடியாக 1.5 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார். மேலும், உள்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என அலேக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் புதின் ஆலோசனை வழங்கினார்.

Tags :
|