Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு டூ வேளாங்கண்ணி இடையேயான ரயில் சேவை அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு

பெங்களூரு டூ வேளாங்கண்ணி இடையேயான ரயில் சேவை அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு

By: vaithegi Thu, 21 Sept 2023 3:42:17 PM

பெங்களூரு டூ வேளாங்கண்ணி இடையேயான ரயில் சேவை அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு

சென்னை: பெங்களூரு – வேளாங்கண்ணி இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு ...ரயில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்ரயிலானது கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் வாயிலாக இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் தற்போது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவை அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுவுள்ளது.

train service,bangalore,velankanni , ரயில் சேவை,பெங்களூரு,வேளாங்கண்ணி

இதனையடுத்து சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்படும் இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு நள்ளிரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். தற்போது இச்சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று கொண்டு வருகிறது.

Tags :