Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்

அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்

By: Nagaraj Fri, 17 June 2022 6:51:42 PM

அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்

புதுடில்லி: அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் ‘அக்னி வீர்’ எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 முதல் 21 வயது வரை என தெரிவிக்கப்பட்டது. 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

bharat bandh,orattam,valu,agnipath,telangana,bihar ,பாரத் பந்த், ோராட்டம், வலு, அக்னிபத், தெலுங்கானா, பீகார்

இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது.
போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீ வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்தரப் பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|