Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது

பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது

By: vaithegi Fri, 19 Aug 2022 7:10:49 PM

பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. சுமார் ரூ.10.50 கோடி செலவில் அணை கட்டப்பட்டது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பவானிசாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். இதன் உயரம் 105 அடியாக உள்ளது.

இதை அடுத்து பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

bhavanisagar dam,full capacity ,பவானிசாகர் அணை ,முழு கொள்ளளவு

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம். கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணையில் 2 நீர் மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. அதேபோல் பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

Tags :