Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் காலமானார்

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் காலமானார்

By: Nagaraj Mon, 16 Nov 2020 8:02:59 PM

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் காலமானார்

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியா. இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா ரசிகர்கள், ஆர்மிகள் என பல உருவாகின.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா எந்தளவுக்கு பிரபலமோ, அதேபோல் அவரது அப்பாவுக்கும் ரசிகர்கள் உருவாகினர். காரணம் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா – கவின் காதலை அப்பாக்குரிய தொனியில் கண்டித்தும், கவினிடம் அன்பாகவும் பேசி விட்டும் சென்றார். இதனாலயே #losliyafather என்று ஹேஷ்டாக்கும் கூட ட்ரெண்டானது.

laslia,father,heart attack,canada,tragedy,hashtag ,லாஸ்லியா, தந்தை, மாரடைப்பு, கனடா, சோகம், ஹேஸ்டாக்

இந்நிலையில் கனடாவில் பணியாற்றி வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் லாஸ்லியா ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பாவுடனான புகைப்படத்தை பதிவிட்டு உடைந்த இதயம் கொண்ட எமோஜியை பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவின் தந்தை மறைவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|