Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்திக்கு பீகார் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆதரவு

ராகுல் காந்திக்கு பீகார் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆதரவு

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:16:31 PM

ராகுல் காந்திக்கு பீகார் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆதரவு

பீகார்: ஆதரவு கரம் நீட்டினார்... மக்களவையில் தனது உரையை முடித்துக் கொண்ட ராகுல்காந்தி, பெண் உறுப்பினர்களுக்கு “பிளையிங் கிஸ்” (பறக்கும் முத்தம்) கொடுத்தாக கூறப்படும் விவகாரத்தில் பீகார் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. நீது சிங், ராகுல் காந்திக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்.

இளம் பெண்களுக்கு பஞ்சமில்லாத நிலையில் ராகுல்காந்தி ஏன் 50 வயதான பெண்களுக்கு பிளையிங் கிஸ் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக விடியோவில் பேசிய பிகார் பெண் எம்.எல்.ஏ. நீதுசிங், ராகுல்காந்திக்கு பெண்களுக்கு பஞ்சமே இல்லை. அவர் பிளையிங் கிஸ் கொடுக்க விரும்பினால், இளம் பெண்களுக்கு கொடுத்திருக்கலாம்.

அவர் ஏன் 50 வயதான பெண்களுக்கு பறக்கும் முத்தம் தர வேண்டும். அவர் மீதான புகார்கள் அடிப்படையில்லாதவை என்று கூறியுள்ளார். இந்த விடியோ வைரலானதை அடுத்து நீது சிங்கின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மக்களவையில் 20 –க்கும் மேலான பெண் எம்.பி.க்கள் இருந்த நிலையில் ராகுல்காந்தி, பெண் எம்.பி.க்களுக்கு “பிளையிங் கிஸ்” கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.இது தொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாஜக பெண் எம்.பி.க்கள் சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

support,woman mla,opham,minister,rahul gandhi ,ஆதரவு, பெண் எம்எல்ஏ, ோபம், அமைச்சர், ராகுல்காந்தி

அந்த கடிதத்தில் ராகுல்காந்தி, அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாகவும் பெண் எம்.பி.க்களை அவமதித்து விட்டதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இதுபோன்று முன்எப்போதும் நடந்ததில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் பெண்களை வெறுப்பவர்கள்தான் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார்.

பா.ஜ.க. எம்.பி.க்கள் இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பகிர முற்பட்டனர். ஆனால், அதுபோன்ற எந்த காட்சியும் பதிவாகவில்லை. இதனிடையே ராகுல் கொடுத்த பறக்கும் முத்தம், பெண் எம்.பி.க்களை குறிவைத்து அல்ல, அது அனைவருக்கும் அன்பின் பேரில் தரப்பட்ட முத்தம் என்று சிவேசனை கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

பறக்கும் முத்தம் விவகாரத்தில் ஆவசேம் காட்டும் ஸ்மிருதி இரானி, பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தபோது எங்கே போனார் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விஷயத்தில் கோபம் காட்டும் பெண் அமைச்சர், அவரது வரிசைக்கு இரண்டு வரிசை பின்னார் அமர்ந்திருக்கும் பிரிஜ்பூஷனிடம் மட்டும் ஏன் கோபத்தை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார் தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால்.

Tags :
|