Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட்ட பீகார் அரசு

சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட்ட பீகார் அரசு

By: Nagaraj Tue, 03 Oct 2023 6:42:36 PM

சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட்ட பீகார் அரசு

பீகார்: பீகார் அரசு வெளியிட்டது... சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பீகார் அரசு வெளியிட்டுள்ளது. மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக உள்ளதாம்.

இதில் ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

bihar,valukkadu,caste wise,census,scheduled population,report ,பீகார், விழுக்காடு, சாதிவாரி, கணக்கெடுப்பு, பட்டியலின மக்கள், அறிக்கை

இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 விழுக்காடு இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 விழுக்காடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு மக்கள் தொகையில் 15.52 விழுக்காடு என்றும், பட்டியலின மக்கள் 19.65 விழுக்காடு மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1.68 விழுக்காடு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|