Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, பசுமை மருத்துவமனையாக அறியப்படும்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, பசுமை மருத்துவமனையாக அறியப்படும்

By: Nagaraj Wed, 05 Oct 2022 8:55:43 PM

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, பசுமை மருத்துவமனையாக அறியப்படும்

பிலாஸ்பூர்: எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு... ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இன்று திறக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பசுமை மருத்துவமனையாக அறியப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் கடந்த 2017ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் ரூ.1470 கோடிக்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக உருவாக்கப்பட்டுள்ளது.

bilaspur,opening,aiims,state-of-the-art,hospital ,பிலாஸ்பூர், திறப்பு, எய்ம்ஸ், அதிநவீனம், மருத்துவமனை

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஹிமாச்சலின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குறைந்த விலையில் மருத்துவ சேவையை அதிகரிப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்தவாரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 'பசுமை மருத்துவமனை'யாக அறியப்படும்.

ஒரு மத்திய பல்கலைக்கழகம், ஒரு ஐஐடி, ஒரு ஐஐஎம் மற்றும் தற்போது பிலாஸ்பூர் எய்ம்ஸ் ஹிமாச்சலுக்கு பெருமை சேர்க்கும். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்தியாவுக்கு வரும்போது,உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான சூழலுடன் முழுமையான சிகிச்சைக்காக ஹிமாச்சலத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|