Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8 கோடி அளவுக்கு பில்

அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8 கோடி அளவுக்கு பில்

By: Karunakaran Sun, 14 June 2020 3:31:19 PM

அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8 கோடி அளவுக்கு பில்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். உலகளவில் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 21,42,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,54,106 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 16,744 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெண்டிலேட்டர்கள் உதவியுடன் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரது மருத்துவமனைக் கட்டணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

us,coronavirus,treatment,coronary ,அமெரிக்கா,கொரோனா சிகிச்சை,கட்டணம்,வெண்டிலேட்டர்

கொரோனா வைரஸ் காரணமாக மைக்கேல் ஃப்ளோர் என்ற நபர் பாதிக்கப்பட்டு 62 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வந்தார். இதில் 29 நாட்கள் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீது வழங்கப்பட்டுள்ளது. அதில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது.

வெண்டிலேட்டர் கட்டணம் ஒரு நாளைக்கு 82 ஆயிரம் டாலர் என்ற வகையில் 29 நாட்களுக்குப் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 9,736 டாலர் என்ற விதம் 4,09,000 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பிளோர் அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்ததால், அவர் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இருப்பினும் இந்த கட்டணத்தை கண்டு அவர் அதிர்ச்சியடைந்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுமார் ஒரு மில்லியன் டாலர் எனது உயிரைக் காப்பற்றியுள்ளது. அந்த பணம் நல்ல முறையில் செலவு செய்யப்பட்டதாக நான் கூறுவேன் " என்று கூறியுள்ளார்.

Tags :
|