Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுப்பாட்டை மீறிய ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் பில் ஹோகன் ராஜினாமா

கொரோனா கட்டுப்பாட்டை மீறிய ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் பில் ஹோகன் ராஜினாமா

By: Karunakaran Fri, 28 Aug 2020 3:02:29 PM

கொரோனா கட்டுப்பாட்டை மீறிய ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் பில் ஹோகன் ராஜினாமா

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் வர்த்தக கமிஷனராக பதவி வகித்து வந்த பில் ஹோகன் கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கல்வே கவுண்டியில் கடந்த 19-ந்தேதி நடந்த கோல்ப் விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது, பில் ஹோகன் 80 பேருடன் கலந்து கொண்டார். இது அயர்லாந்து அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய செயல் என புகார்கள் எழுந்தன. மேலும், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் இருந்து அயர்லாந்து திரும்பியபோது, அவர் தனிமைப்படுத்துதல் விதியை பின்பற்றவில்லை என கூறப்பட்டது.

bill hogan,resign,eu trade commissioner,ireland ,பில் ஹோகன், ராஜினாமா, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர், ஐயர்லாந்து

ஆனால் பில் ஹோகன் இதை மறுத்தார். மேலும் அவர், தான் சட்டத்தை மீறவில்லை என்றும், கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் பதவி விலக கோரிக்கை வலுத்து வந்ததால், நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமா கடிதத்தில், அவர் அயர்லாந்துக்கு வந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் தனது வருகையின்போது நடந்த தவறுகளுக்காக அயர்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அயர்லாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள்படி, யார் அங்கு சென்றாலும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

Tags :
|