Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க பாராளுமன்றத்தில் ராணுவத்தை நவீனமயமாக்கும் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க பாராளுமன்றத்தில் ராணுவத்தை நவீனமயமாக்கும் மசோதா நிறைவேற்றம்

By: Nagaraj Sat, 13 June 2020 09:16:41 AM

அமெரிக்க பாராளுமன்றத்தில் ராணுவத்தை நவீனமயமாக்கும் மசோதா  நிறைவேற்றம்

மசோதா நிறைவேற்றம்... அமெரிக்க பாராளுமன்றத்தில் 55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ராணுவத்தை நவீன மயமாக்குவதற்கான மசோதா நிறைவேறியது.

சீனா, ரஷ்யா நாடுகள் வைத்துள்ள ராணுவ தளவாடங்களை விட, அதி நவீன தொழில்நுட்பத்திலான போர்க் கருவிகளையும், ராணுவ தளவாடங்களையும் உருவாக்க, அமெரிக்கா தீர்மானித்து உள்ளது. இதற்காக, வரும், 2020-21ம் நிதியாண்டில், ராணுவ பட்ஜெட்டிற்கு, 55 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, அந்நாடு திட்டமிட்டுள்ளது.

us,bill,military,russia,china ,
அமெரிக்கா, மசோதா, ராணுவம், ரஷ்யா, சீனா

இது தொடர்பான, தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்ட மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் ஆயுதபடை சேவைகள் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.இந்த மசோதா, சீனா, ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ பலத்தை வலுப்படுத்த துணை புரியும். குறிப்பாக, 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்கள், உயிரி தொழில்நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் வலுப்பெற உதவும்.

நிலம், கடல், வான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த தேவையான முதலீடுகளுக்கும், தளவாடங்களின் கொள்முதலுக்கும், மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை போர் விமானங்கள், போர் கப்பல்கள், நவீன அணுஆயுதங்கள், ராணுவத்தில் சேர்க்கப்படும்.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு, ராணுவ ஏவுகணை தொழில்நுட்பங்களை அளிப்பதற்கும், அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்களை ஒருங்கிணைப்பதற்கும், மசோதாவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|