Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாய் பட்டத்து இளவரசரின் காரில் கூடுகட்டி, குஞ்சு பொறித்து குடியிருந்து வரும் பறவைகள்

துபாய் பட்டத்து இளவரசரின் காரில் கூடுகட்டி, குஞ்சு பொறித்து குடியிருந்து வரும் பறவைகள்

By: Karunakaran Wed, 02 Sept 2020 11:28:37 AM

துபாய் பட்டத்து இளவரசரின் காரில் கூடுகட்டி, குஞ்சு பொறித்து குடியிருந்து வரும் பறவைகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ‘மெர்சிடஸ்’ காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு வைத்து முட்டையிட்டது.

கூட்டில் பறவை அமர்ந்து அடை காக்க தொடங்கியது. இதனை கண்ட பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். கூட்டை கலைக்கும் விதமாக அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் யாரும் சென்றுவிடக்கூடாது என எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்தார்.

birds,nest,dubai crown prince,hatching chicks ,பறவைகள், கூடு, துபாய் பட்டத்து  இளவரசன், பொரிக்கும் குஞ்சுகள்

அந்த பறவை தனது முட்டைகளை காரின் முகப்பு பகுதியில் அடைகாத்து வந்தது. ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்றது. கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த பறவை தான் அடை காத்த முட்டைகளில் இருந்து 2 குஞ்சுகள் வெளியே வந்தது. இதனை பட்டத்து இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

இன்று அந்த குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலையில் உள்ளன. தாய் பறவை தொடர்ந்து உணவை தேடி தன் குஞ்சுகளுக்கு அளித்து வருகிறது. அந்த காரின் முகப்பு பகுதிலேயே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டு அகலாமல் மகிழ்ச்சியுடன் பறவை குஞ்சுகள் விளையாடி வருகின்றன. இந்த பறவைகளை ஆச்சரியத்துடன் பலர் பார்த்து செல்கின்றனர்.

Tags :
|
|