Advertisement

உலகின் மிகப்பெரிய முதலைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

By: Nagaraj Sun, 11 June 2023 11:20:01 PM

உலகின் மிகப்பெரிய முதலைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆஸ்திரேலியா: உலகின் பெரிய முதலைக்கு பிறந்தநாள்... ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரீன் தீவு. இங்குள்ள மரைன்லேண்ட் முதலைப் பூங்காவில் வசிக்கும் உலகின் மிகப்பெரிய முதலையான காசியஸ், இந்த வாரம் தனது 120வது பிறந்தநாளை கொண்டாடியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறக்குறைய 18 அடி நீளமுள்ள உப்புநீர் ராட்சத பூங்காவில் 1987 முதல் இந்த முதலை வாழ்ந்து வருகிறது. காசியஸ் முதலையானது, கின்னஸ் உலக சாதனைகளின்படி உலகின் மிகப்பெரிய முதலை என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கிறது.

crocodile,explorers,birthday,celebration,cassius ,முதலை, ஆராய்ச்சியாளர்கள், பிறந்தநாள், கொண்டாட்டம், காசியஸ்

தனது பிறந்த நாளைக் கொண்டாடும் போது, காசியஸுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அமைந்தது பிறந்தநாள் விருந்து தான். காசியஸுக்கு கோழி மற்றும் டுனா மீன்கள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள் பூங்காவிலிருக்கும் அதன் பராமரிப்பாளர்கள்.

உலகின் மிக வயதானதெனக் கருதப்படும் இந்த பழம்பெரும் முதலை 16 அடி 10 அங்குல நீளத்துடன் காட்சியளிக்கிறது. வால் மட்டுமே குறைந்த பட்சம் 6 அங்குல நீளம் கொண்டதாகக் காணப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபின்னிஸ் ஆற்றில் காசியஸ் பிடிபட்டபோது அதற்க்கு 30 முதல் 80 வயது இருக்கும் என முதலை ஆராய்ச்சியாளரான கிரேம் வெப் கூறுகிறார்.

Tags :