Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 7 வருடமாக முதலிடம் வகிக்கும் பிரியாணி... இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு

7 வருடமாக முதலிடம் வகிக்கும் பிரியாணி... இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு

By: Nagaraj Fri, 16 Dec 2022 11:46:08 PM

7 வருடமாக முதலிடம் வகிக்கும் பிரியாணி... இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு

புது டெல்லி: ஏழு வருடமாக முதலிடம்... பிரியாணி தான் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து உண்ணும் உணவு என்று ஸ்விகி பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

பிரபலமான ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. பிரியாணி தான் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து உண்ணும் உணவு எனவும் ஸ்விகி பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

மேலும், நாடு முழுவதும் நிமிடத்திற்கு 137 பிரியாணிகள் (வினாடிக்கு 2.28 பிரியாணி) ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

biriyani,food,list, ,உணவு, பட்டியல், பிரியாணி, இந்தியர்கள்

அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளன.

இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 சிற்றுண்டிகளின் பட்டியலில் சமோசா மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியர்களிடையே பிரியாணியின் புகழ் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Tags :
|
|