Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் நம்பிக்கையில்லை... பாஜக குற்றச்சாட்டு

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் நம்பிக்கையில்லை... பாஜக குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 11 July 2023 7:02:40 PM

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் நம்பிக்கையில்லை... பாஜக குற்றச்சாட்டு

மேற்குவங்கம்: உள்ளாட்சி தேர்தலில் நம்பிக்கையில்லை... மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

voting,mamata government,officials,forced,no faith ,வாக்குப்பதிவு, மம்தா அரசு, அதிகாரிகள், கட்டாயம், நம்பிக்கையில்லை

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாகஜ மாநில பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடந்து முடிந்த கிராம உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு (பாஜக) நம்பிக்கையில்லை. தேர்தலின்போது எங்கும் வன்முறை நிலவியது. மம்தா அரசின் அதிகாரிகள் கட்டாயத்தின்பேரில் வாக்குப்பதிவை நிறைவு செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|