Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரதீய ஜனதா கட்சி சதிசெய்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது - அகிலேஷ் யாதவ்

பாரதீய ஜனதா கட்சி சதிசெய்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது - அகிலேஷ் யாதவ்

By: Karunakaran Wed, 11 Nov 2020 6:08:07 PM

பாரதீய ஜனதா கட்சி சதிசெய்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தபோது, ஆளும் பா.ஜனதா கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. இக்கட்சியின் ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகரித்துள்ளன. அதிகாரத்தில் இருப்போரின் ஆதரவால், குற்றவாளிகள் பயமின்றிச் செயல்படுகின்றனர். அப்பாவிகள், ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் துயரங்கள் கூடியிருக்கின்றன என்று கூறினார்.

ஜனநாயகத்தை காப்பதற்காக சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து எங்கள் கட்சி போராடும். மக்களின் ஆதரவு, விழிப்புணர்வு இருந்தால்தான் இந்த போராட்டத்தைத் தொடர முடியும். நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பா.ஜனதா பலவீனப்படுத்தி வருகிறது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருந்தால்தான் அவை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இருக்கும். ஆனால் தேர்தல்களை சர்ச்சைக்குரியவையாகவும், நம்பகம் அற்றவையாகவும் பா.ஜனதா மாற்றிவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

bjp,elections,akhilesh yadav,conspire ,பாஜக, தேர்தல், அகிலேஷ் யாதவ், சதி

புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் கோபம் அடைந்துள்ளனர். விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்பாக அவர்கள் தற்போது துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற பா.ஜனதா, தற்போது அதுபற்றி பேசுவதில்லை. உத்தரபிரதேசத்தில் போலீசாரின் செயல்பாடுகளால் அப்பாவி பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். பொய்யான என்கவுண்ட்டர்கள் குறித்து மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மேலும் அவர், தற்போதைய ஆட்சியில், விலைவாசி அதிகரித்துள்ளது. காய்கறிகள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரம், டீசல் ஆகியவையும் செலவுமிகுந்தவை ஆகிவிட்டன. மாநிலத்தில் தற்போது புதிதாக எந்த தொழிற்சாலையும் உருவாகவில்லை, இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் கிட்டவில்லை என கூறினார்.

Tags :
|