Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருக்க விரும்பாது... காங்கிரஸ் தலைவர் கண்டனம்

உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருக்க விரும்பாது... காங்கிரஸ் தலைவர் கண்டனம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 7:39:11 PM

உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருக்க விரும்பாது... காங்கிரஸ் தலைவர் கண்டனம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக எடுத்துள்ளது. அவர்கள் ஒருபோதும் உண்மை பேசுபவர்களை வைத்திருக்க விரும்புவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி. ராகுல் காந்தியை அப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

bjp,condemnation,congress,leader,speakers,truth, ,உண்மை, கண்டனம், காங்கிரஸ், தலைவர், பாஜக, பேசுபவர்கள்

இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களவையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக எடுத்துள்ளது. அவர்கள் ஒருபோதும் உண்மை பேசுபவர்களை வைத்திருக்க விரும்புவதில்லை.

உண்மை பேசுபவர்கள் பாஜகவிடம் இல்லை. காங்கிரஸ் தொடர்ந்து உண்மையை பேசும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags :
|
|
|