Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தல் ..3 மாநிலத்திற்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது

சட்டமன்ற தேர்தல் ..3 மாநிலத்திற்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது

By: vaithegi Tue, 10 Oct 2023 09:31:03 AM

சட்டமன்ற தேர்தல்   ..3 மாநிலத்திற்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது

இந்தியா: நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த வருட இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான “வாக்குபதிவு நாள்” பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது. வருகிற நவம்பர் 7ஆம் தேதி முதல் தேர்தல் ஆரம்பித்து 5 மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து 5 மாநில தேர்தல் வர உள்ளதால் காங்கிரஸ், பாஜக மற்றும் மாநில கட்சிகள் வெகு தீவிரமாக தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவுள்ளனர். இதில் நேற்று 3 மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்தது

bjp,assembly elections ,பாஜக ,சட்டமன்ற தேர்தல்

காங்கிரஸ் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதில் பாஜக எம்பியாக இருக்கும் அந்த மாநில தலைவர் அருண் சாவ் லார்னி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி அதன் பின்னர் பாஜக வசம் சென்ற மத்திய பிரதேசத்தில் 57 வேட்பாளர்களை நேற்று பாஜக தலைமை அறிவித்தது. ஏற்கனவே ஆகஸ்ட் 17 மற்றும் சுற்றும் செப்டம்பர் 25ஆம் தேதி 2 கட்டங்களாக வேட்பாளர்களை பாஜக அறிவித்த்த. நேற்று அறிவிக்கப்பட்ட 57 வேட்பாளர்களின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர் ஏற்கனவே போட்டியிட்ட புத்னி தொகுதியில் போட்டியிடவுள்ளார். அடுத்து காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் முதற்கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அரசு தலைமை அறிவித்துள்ளது.

Tags :
|