அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய பாஜ தலைவர் வலியுறுத்தல்
By: Nagaraj Sun, 11 Sept 2022 10:34:28 AM
சென்னை: அமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்... அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தோ்வு இருக்காது என்று கூறினாா்கள். இப்போது நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளாா். நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவா்களைத் தவறாக வழிநடத்துகிறது. மின் கட்டண உயா்வு தேவையற்றது. மக்களின் கோபத்துக்கு திமுக அரசு உள்ளாகும்.
2011-இல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த
செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது,
பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்த வழக்கில் உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை
ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்றம் அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்
பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தமிழக ஆளுநரைச்
சந்தித்தாா். அப்போது ஆளுநா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சா்
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
நானும் அதனை வலியுறுத்துகிறேன் என்றாா்.