Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ..நடைபயணம் தள்ளிவைப்பு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ..நடைபயணம் தள்ளிவைப்பு

By: vaithegi Wed, 04 Oct 2023 5:07:52 PM

பாஜக தலைவர்  அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு  ..நடைபயணம் தள்ளிவைப்பு

சென்னை: : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது.. நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து உரையாற்றினார். அதன்பின்னர் அண்ணாமலை,பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார்.

hiking,annamalai,illness ,நடைபயணம் ,அண்ணாமலை,உடல்நலக்குறைவு

இந்த நிலையில் என் மண் என் மக்கள் நடைபயணம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வருகிற அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும்,

மேலும் நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|