Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தியில் பாஜக எம்.பி. நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

அயோத்தியில் பாஜக எம்.பி. நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

By: Nagaraj Fri, 02 June 2023 8:46:03 PM

அயோத்தியில் பாஜக எம்.பி. நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

அயோத்தி: பேரணிக்கு அனுமதி மறுப்பு... உ.பி. அயோத்தியில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஜூன் 5-ம் தேதி நடத்தவிருந்த பேரணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் திட்டமிடப்பட்ட பிற நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, பிரிஜ் பூஷன் சரண் சிங் பேரணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பிரிஜ் பூஷன் தனது முகநூல் பதிவில், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டில் போலீஸ் விசாரணை நடந்து வருவதால், ராம் கதா பூங்காவில் நடக்கவிருந்த பேரணியை சில நாட்களுக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்துள்ளார்.

police,permit,denial,agitation,jandar mandar,prosecution ,காவல்துறையினர், அனுமத, மறுப்பு, போராட்டம், ஜந்தர் மந்தர், வழக்குப்பதிவு

சமூகத்தில் தீயசக்திகளை விரட்டுவதற்கு மதகுருமார்களுடன் இணைந்து பேரணி நடத்தவுள்ளதாக பிரிஜ் பூஷன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி வீரர்கள் சென்றபோது காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அத்துடன், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கும் தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|