Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

By: Monisha Sat, 26 Sept 2020 6:40:49 PM

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

bjp,executives,assembly elections,bihar ,பாரதிய ஜனதா கட்சி,நிர்வாகிகள்,சட்டசபை தேர்தல்,பீகார்

இதில் சத்திஷ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பாஜக கட்சியின் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உள்பட தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

Tags :
|