Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசிய தமிழக தலைவர் அண்ணாமலை

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசிய தமிழக தலைவர் அண்ணாமலை

By: Nagaraj Thu, 13 July 2023 8:06:31 PM

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசிய தமிழக தலைவர் அண்ணாமலை

சென்னை: டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

annamalai,bjp,jp natta,national president,santhipu ,அண்ணாமலை, சந்திப்பு, ஜெ.பி.நட்டா, தேசியத் தலைவர், பாஜக

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம், ஆளுநர் – முதல்வர் மோதல் விவகாரம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்த முதற்கட்ட தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் 2009-ம் ஆண்டு 28-ம் தேதி நடைபெறவுள்ள பாதயாத்திரை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக செய்து வரும் பணிகள் குறித்து ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|