Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நல பணிகளுக்கு பாஜக கட்சி ஏற்பாடு

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நல பணிகளுக்கு பாஜக கட்சி ஏற்பாடு

By: Karunakaran Mon, 07 Sept 2020 4:10:37 PM

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நல பணிகளுக்கு பாஜக கட்சி ஏற்பாடு

குஜராத் மாநிலம், வாத்நகரில், 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, ஹிரான் பென் மோடி தம்பதியரின் 3-வது மகனாக பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். இந்நிலையில் வருகிற 17-ந் தேதி அவரது 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை சிறப்பாக கொண்டாட பாரதீய ஜனதா கட்சியினர் விரும்புகின்றனர்.

அதன்படி, பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, பல வார கொண்டாட்டங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மறுஅமர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கவுள்ளதால், அன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கி, கூட்டத்தொடர் முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

bjp,public welfare function,prime minister modi,70th birthday ,பாஜக, மக்கள் நல விழா, பிரதமர் மோடி, 70 வது பிறந்த நாள்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது, பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரசாரம், துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை வினியோகித்தல், ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மூக்கு கண்ணாடிகள் வழங்கும் முகாம், பிளாஸ்மா தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டங்களின் முன்னுரிமையாக பொதுநலன் இருக்கும் என அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ஓம் பிரகா‌‌ஷ் தங்கர் கூறினார்.

மேலும் இதுகுறித்து ஓம் பிரகா‌‌ஷ் தங்கர் கூறுகையில், ரதமர் மோடி பிறந்த தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று மக்களை கேட்போம். இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் போன்றவையும் நடத்தப்படும் என்று கூறினார்.

Tags :
|