Advertisement

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

By: vaithegi Mon, 23 Oct 2023 10:47:48 AM

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

சென்னை: நவம்பர் மாதத்தில், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் , தெலுங்கானா என்று 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இதையடுத்து நேற்று பாஜக தரப்பில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு தற்போது 52 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டது.

bjp candidate ,பாஜக ,வேட்பாளர்


இதில் 3 பாஜக எம்.பி.க்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் 118 தொகுத்திகளில் போட்டியிட்டு, கோஷாமஹால் தொகுதியில் மட்டுமே பாஜக சார்பில் டி ராஜா சிங் வெற்றி பெற்று இருந்தார்.

இதற்கு முன்னதாக, டி.ராஜா சிங் மீது சர்ச்சை கருத்துக்கள் பேசியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யபட்டார் என்பதும், பின்னர் அண்மையில் அந்த சஸ்பெண்ட் தொடர்பாக டி.ராஜா சிங் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மீண்டும் அவர் பாஜக கட்சியில் சேர்க்கப்பட்டார்.

தெலங்கானாவில் 4 எம்.பிக்கள் பாஜக விடம் உள்ள நிலையில், அதில் மூன்று பேர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களாக இடம்பெற்று உள்ளனர். அடிலாபாத் எம்பி சோயம் பாபு ராவ் போத் தொகுதியிலும், நிஜாமாபாத் எம்பி அரவிந்த் தர்மபுரி கொருட்லாவிலும், கரீம்நகர் எம்பியுமான பாண்டி சஞ்சய் குமார் கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

Tags :