Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக பாஜக வெளியிட்டது

189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக பாஜக வெளியிட்டது

By: Nagaraj Thu, 13 Apr 2023 1:26:38 PM

189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக பாஜக வெளியிட்டது

கர்நாடகா: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக பாஜக வெளியிட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடகாவில் உள்ள 222 சட்டசபை தொகுதிகளுக்கு மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி நாளை முதல் 20ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வேட்புமனுக்கள் ஏப்ரல் 21ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

assembly,bjp,candidate,election,karnataka,list,release , கர்நாடகா, சட்டமன்றம், தேர்தல், பட்டியல், பாஜக, வெளியீடு, வேட்பாளர்

இந்நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக பாஜக வெளியிட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாம்வ தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 20 பேர் பட்டியல் பழங்குடியினர், 16 பேர் பட்டியல் பழங்குடியினர்.

இதனிடையே, ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரப்பா, இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|