Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிப்பு

தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிப்பு

By: vaithegi Wed, 02 Nov 2022 7:02:54 PM

தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிப்பு

சென்னை: அண்ணாமலை நன்றி தெரிவிப்பு .... மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் 3ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழா இன்று தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து இந்த நிலையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதை ஏற்று, இந்த ஆண்டு முதல் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

annamalai,tamil nadu govt ,அண்ணாமலை ,தமிழ்நாடு அரசு


இதையடுத்து இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ள நிலையில் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், , “மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம். அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என இதை முதலமைச்சர் செயல்படுத்திட வேண்டும்” என கேட்டுக்கொண்டிள்ளார்..

Tags :