Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் போட்டியிட பா.ஜ.க. அதிக ஆர்வம்

சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் போட்டியிட பா.ஜ.க. அதிக ஆர்வம்

By: Monisha Sun, 20 Dec 2020 4:20:15 PM

சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் போட்டியிட பா.ஜ.க. அதிக ஆர்வம்

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அ.தி.மு.க.- பாரதீய ஜனதா ஒரு கூட்டணியாகவும், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை மற்றொரு கூட்டணியாகவும் உருவாகி உள்ளது.

மேலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இந்த கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று பாரதீய ஜனதா கட்சி இப்போதே யோசிக்க தொடங்கி விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி குறைந்தது 50 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. அ.தி.மு.க. தரப்பில் 35 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

election,party,contest,alliance,constituency ,தேர்தல்,கட்சி,போட்டி,கூட்டணி,தொகுதி

இதில் தென்மாவட்டங்களில் குறைந்தது ஐந்து சட்டசபை தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது. குமரி மாவட்டத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளை கேட்கிறது. இதில் உறுதியாக இரண்டு சட்டசபை தொகுதிகளில் பாரதீய ஜனதா போட்டியிடும் என்று கூறப்படுகிறது. அதுபோல தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி வீதம் மூன்று தொகுதிகளில் உறுதியாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.

தென்மாவட்டங்களில் பாரதீய ஜனதாவுக்கு ஒரு ‘ரிசர்வ்’ தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரம் தொகுதி பங்கீட்டில்தான் அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார்கள். அதுவரை இந்த தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் மறைமுகமாக முயன்று வருகிறார்கள்.

Tags :
|