Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலங்களவைத் தேர்தல் முடிவ வெளியீடு..... கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி

மாநிலங்களவைத் தேர்தல் முடிவ வெளியீடு..... கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி

By: vaithegi Sat, 11 June 2022 07:22:12 AM

மாநிலங்களவைத் தேர்தல் முடிவ வெளியீடு..... கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் அதற்கான முடிவு (இன்று) 11-ந்தேதி வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டனர்.

இதனையடுத்து, மீதமுள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்று, ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணப்பட்டு 7 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

election result publication,election commission,state legislature,candidate ,தேர்தல் முடிவ வெளியீடு, தேர்தல் ஆணையம்,மாநிலங்களவை,வேட்பாளர்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முகல் வாசினிக், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக-ஜே.ஜே.பி. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் உள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. இந்த மாநிலத்தில் போட்டியிட்ட மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெற்றி பெற்றார். சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் பவார் தோல்வியடைந்தார்







Tags :