Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபாளையத்தில் கருப்புக் கொடி ஊர்வலம்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபாளையத்தில் கருப்புக் கொடி ஊர்வலம்

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:54:59 PM

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபாளையத்தில் கருப்புக் கொடி ஊர்வலம்

விருதுநகர்: கருப்பு கொடி காட்டி ஊர்வலம்... ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி ஊர்வலம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூ கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபாளையம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

black flag,protest,tamil nadu governor.,visit, ,எதிர்ப்பு, கருப்புக்கொடி, தமிழக ஆளுநர், வருகை

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது, காரல் மார்க்சை இழிவுபடுத்தி பேசியதற்காக கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் கவர்னரை கண்டித்தும், கவர்னர் திரும்பி செல்ல வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், கருப்புக்கொடி காட்டி சாலையில் பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காந்தி சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 7 பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags :
|