Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் மீண்டும் வெடித்தது நிறவெறி போராட்டம்

கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் மீண்டும் வெடித்தது நிறவெறி போராட்டம்

By: Monisha Mon, 15 June 2020 09:47:00 AM

கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் மீண்டும் வெடித்தது நிறவெறி போராட்டம்

அமெரிக்காவின் மின்னசோட்டா என்ற இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபர் போலீசாரின் பிடியில் பலியானார். இதையடுத்து நாடு முழுவதும் நிறவெறி போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தில் வன்முறைகளும் ஆங்கங்கே வெடிக்க துவங்கியது.

போலீசாரின் அடக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் பரவின. இந்தப் போராட்டங்களில், பெருமளவிலான மக்கள் பேரணியாக திரண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருந்தார். இந்த தகவல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசார் வாலிபரை விசாரணைக்கு அழைத்தனர். அந்த வாலிபரின் பெயர் ரேஷார்ட் புரூக்ஸ் (27).

america,black youth,massacre,apartheid struggle ,அமெரிக்கா,கருப்பின வாலிபர்,சுட்டுக்கொலை,நிறவெறி போராட்டம்

ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Tags :