Advertisement

வெளுத்துக் கட்டும் மழை.. வெள்ளப்பெருக்கு அபாயம்..

By: Monisha Wed, 06 July 2022 8:39:46 PM

வெளுத்துக் கட்டும் மழை.. வெள்ளப்பெருக்கு அபாயம்..

மும்பை: மும்பையில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தானே பகுதியில் திடீர் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.. இதனால், மின்சார ரயில்கள், பேருந்துகள், டாக்சிகளுக்காக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

3,500 பேர் தற்போது பாதுகாப்பான இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது

rain,flood,safe,landslide ,மும்பை, மழை,நிலச்சரிவு,வானிலை,

பிறகு, மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் மழை கொட்ட தொடங்கிவிட்டது.இந்த பகுதிகளில்தான் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு மகாராஷ்டிராவில் தேசிய பேரிடர் மீட்பு படையின் எட்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்..மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழித் தடங்கள் எல்லாம் மாற்றி விடபட்டுள்ளது.

Tags :
|
|
|