Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’

துபாயில் வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’

By: Karunakaran Thu, 22 Oct 2020 2:02:36 PM

துபாயில் வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’

அமீரக குடியிருப்பு பகுதிகளில் மற்ற நாடுகளை போல் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளை காண்பது அரிதாகும். பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளிலேயே இதுபோன்ற உயிரினங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் துபாயின் அல் புர்ஜான் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்தியர் சுனில் சவுத்ரி, வீட்டில் தோட்டம் அமைக்க வெளியிடத்தில் இருந்து மண்கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டது.

அப்போது இவரது வீட்டு குளியலறையில் கருப்பு நிறத்தில் பாம்பு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த பாம்பு ஆபத்தில்லாதது என இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்ட அவர், பாம்பை தானே எடுத்து சென்று குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் விட்டு வந்துள்ளார்.

blind snake,bathroom,dubai,dangerous ,குருட்டு பாம்பு, குளியலறை, துபாய், ஆபத்து

அந்த பாம்பின் புகைப்படத்தை தோட்டக்காரரிடம் காட்டியபோது அதுபோன்ற பாம்பு நீச்சல் குளம் அருகில் பார்த்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து குறித்து துபாயில் உள்ள பூச்சிக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் தினேஷ் ராமச்சந்திரன் கூறுகையில், இது ‘குருட்டு பாம்பு’ எனப்படும் புழு வகையை சேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த வகை பாம்புகள் மண்ணுக்கடியில் அல்லது செடிகளில் காணப்படும். இந்த வகை பாம்புகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. வீட்டில் கண்டால் யாரும் அச்சமடைய தேவையில்லை. அமீரகத்தின் மண்பரப்பில் சாதாரணமாக காணக்கூடியவை என்று விளக்கம் கூறினார்.

Tags :
|