Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் ட்விட்டரில் மீண்டும் ஸ்டார்ட் ஆகிறது ப்ளூ டிக் வசதி

இன்று முதல் ட்விட்டரில் மீண்டும் ஸ்டார்ட் ஆகிறது ப்ளூ டிக் வசதி

By: Nagaraj Mon, 12 Dec 2022 3:41:25 PM

இன்று முதல் ட்விட்டரில் மீண்டும் ஸ்டார்ட் ஆகிறது ப்ளூ டிக் வசதி

சான்பிரான்சிஸ்கோ: இன்று (திங்கட்கிழமை) முதல் ட்விட்டரில் மீண்டும் ‘ப்ளூ டிக்’ வசதி கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகள் அதிகாரப்பூர்வமானவை என்பதை உறுதிப்படுத்த, பெயருக்கு அடுத்ததாக நீல நிற டிக் உள்ளது.

இதன் மூலம், ட்விட்டர் குறிப்பிட்ட பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்த முடியும். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ட்விட்டரை கையகப்படுத்திய எலோன் மஸ்க், ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.659) செலுத்த வேண்டும் என அறிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

blue tick,today,twitter,notice,companies ,ட்விட்டர், தொடக்கம், ப்ளூடிக், அறிவிப்பு, நிறுவனங்கள்

இருப்பினும் எலோன் மஸ்க் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் எலோன் மஸ்க் ‘ப்ளூ டிக்’ அம்சத்தைப் பெறுவதற்கான கட்டணத்தை அறிவித்த போது, ட்விட்டரில் நிறைய போலி கணக்குகள் தோன்றின. இதன் காரணமாக ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ அம்சம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலோன் மஸ்க் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ட்விட்டரில் மீண்டும் ‘ப்ளூ டிக்’ வசதி கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, வணிகக் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும், அதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு செய்யப்படும்.

Tags :
|
|