Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை போட்ட உத்தரவு

முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை போட்ட உத்தரவு

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:31:08 PM

முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை போட்ட உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் உரிய காலத்தில் துவக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் வழக்கம் போல நடைபெற்று கொண்டு வருகிறது. மற்ற தேர்வுகளை தொடர்ந்து 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை 2023 – 2024ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு எவ்வளவு பாட புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்பது குறித்த விவரத்தை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

books,education department ,புத்தகங்கள்,பள்ளிக்கல்வித்துறை, முதன்மைக்கல்வி, உத்தரவு, விபரங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் புத்தகம் வழங்க வேண்டும் என்பதால் இந்த பணியை விரைந்து முடிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
|