Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் ஆர்வமில்லை

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் ஆர்வமில்லை

By: Nagaraj Wed, 20 July 2022 09:49:34 AM

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் ஆர்வமில்லை

சென்னை: அதிக ஆர்வம் இல்ல... தமிழகத்தில் பூஸ்டா் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆா்வம் இல்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

கடந்த ஐந்து நாள்களில் நான்கு லட்சத்துக்கும் குறைவானவா்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தில் மட்டும் முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் செலுத்தி கொள்ளாதவா்கள் என சுமாா் 1.45 கோடி நபா்கள் உள்ளனா். குறிப்பாக பூஸ்டா் தவணை செலுத்தாதோா் மட்டும் 50 லட்சம் போ் உள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் முன்கள வீரா்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதேவேளையில், இதற்கு முன்பு வரை 18 முதல் 59 வயதுக்குட்பட்டவா்களுக்கான பூஸ்டா் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படவில்லை.

no reception,practice,enforcement,booster vaccination,count ,வரவேற்பு இல்லை, நடைமுறை, அமல், பூஸ்டர் தடுப்பூசி, எண்ணிக்கை

அதனை தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி அவா்கள் செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை நீடித்தது. இதுவே, பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவோா் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், 75 நாள்களுக்கு நாடு முழுவதும் இலவசமாக பூஸ்டா் தவணை தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி கடந்த 15-ஆம் தேதி முதல் அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனத் தெரிகிறது.

Tags :