Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங், மக்காவ் இடையேயான எல்லை 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக திறப்பு

ஹாங்காங், மக்காவ் இடையேயான எல்லை 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக திறப்பு

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:52:50 AM

ஹாங்காங், மக்காவ் இடையேயான எல்லை 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக திறப்பு

சீனா: எல்லை முழுமையாக திறப்பு... ஹாங்காங் மற்றும் மக்காவ் இடையேயான எல்லை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இனி வரம்பு இருக்காது. பயணத்திற்கு முன் கோவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஹாங்காங்கில் இருந்து சீனா செல்லும் ரயில்கள் இயங்கும் லோ வு என்ற இந்த நிலையம் உட்பட 4 நிலையங்கள் முழுமையாக திறக்கப்பட்டன. ஒரு நாளைக்கு 50,000 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே இருந்தது.

border,china,hong-kong,macau , கட்டுப்பாடு, கொரோனா, கோவிட்-19, சீனா

தற்போது அது அகற்றப்பட்டுள்ளது. எல்லைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். COVID-19 தொற்றுநோய் மற்றும் கட்டுப்பாடுகள் ஹாங்காங் பொருளாதாரத்தில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது மீண்டும் சுற்றுலா பயணிகளை கவர ஹாங்காங் ஆர்வமாக உள்ளது. இதன் மூலம் நகரம் புத்துயிர் பெறும் என அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் குவிய வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
|
|