Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் - ஜாவோ லிஜியான்

லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் - ஜாவோ லிஜியான்

By: Karunakaran Fri, 10 July 2020 11:54:22 AM

லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் - ஜாவோ லிஜியான்

லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவிக்கப்பட்டதால் போர் மூளும் சூழல் நிலவியது.

இருப்பினும், எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசிய பின், பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப்பட்டது.

zhao lijian,ladakh border,china,india ,ஜாவோ லிஜியன், லடாக் எல்லை, சீனா, இந்தியா

கடந்த 6-ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேறி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லை முழுவதும் தற்போது நிலைமை சீராகவும், மேம்பட்டும் வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர், எல்லை முழுவதும் பதற்ற தணிப்புக்கான ஒருமித்த முடிவுகளை அமல்படுத்துவதிலும், அங்கு அமைதியை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் எங்களுடன் இணைந்து இந்தியாவும் பணியாற்றும் என நாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Tags :
|