Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

By: vaithegi Thu, 20 July 2023 3:02:38 PM

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இந்தியா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 -ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிப்பதோடு, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இக்கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

both houses,opposition parties,parliament , இரு அவை,எதிர்க்கட்சிகள் ,நாடாளுமன்றம்

இதையடுத்து இன்று நாடாளுமன்றம் தொடங்கிய உடனே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும், தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி அவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் திரும்பவும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோன்று மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags :