Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் 16-வது நாளாக முடங்கியது

இன்றுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் 16-வது நாளாக முடங்கியது

By: vaithegi Thu, 06 Apr 2023 3:17:55 PM

இன்றுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் 16-வது நாளாக முடங்கியது

இந்தியா: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், நேற்று நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-ம் கட்ட நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால், கடும் அமளி நீட்டித்ததால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

both houses,parliament ,இரு அவை,நாடாளுமன்ற


மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்று இறுதிநாள் என்பதால், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபட்டுள்ளது .அதாவது, அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், கருப்பு சட்டை அணிந்தும் பதாகைகளை ஏந்தியும், சபாநாயகர் இருக்கை முற்றுகையிட்டு, முழக்கமிட்டதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியதுமே, இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-ம் கட்ட நிகழ்வுகள் தொடங்கிய நாளில் இருந்தே, இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி வலியுறுத்தியும், இங்கிலாந்தில் பேசிய ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு ஆளும் கட்சி பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இன்றுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் 16-வது நாளாக முடங்கியது.

Tags :