Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா; மக்கள் வெகு அச்சம்

பிரேசிலில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா; மக்கள் வெகு அச்சம்

By: Nagaraj Sat, 20 June 2020 10:32:40 PM

பிரேசிலில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா; மக்கள் வெகு அச்சம்

அதிகரிக்கும் கொரோனா... பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 54,771 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. உலகின் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. பிரேசில் 2 வது இடத்திலும், ரஷ்யா 3 வது இடத்திலும் உள்ளன.

corona,affect,brazil,victims,increase ,கொரோனா, பாதிப்பு, பிரேசில், பலியானவர்கள், அதிகரிப்பு

இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சுகாதாரதுறை தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நோய் தொற்றால் 54,771 பேர் பாதிக்கப்பட்டனர்.

பிரேசிலில் நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,32,913 ஆக அதிகரித்துள்ளது.பிரேசிலில் ஒரே நாளில் 1,206 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,954 ஆக உள்ளது. நாட்டில் நோய் தொற்றுக்கு இதுவரை 5,20,000 பேர் வரை குணமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|