Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ...தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ...தமிழக அரசு அரசாணை வெளியீடு

By: vaithegi Wed, 27 July 2022 6:27:09 PM

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ...தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

snack scheme,government of tamil nadu , சிற்றுண்டி திட்டம்,தமிழக அரசு

இதை அடுத்து இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

மேலும் 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது

Tags :