Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்

அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்

By: vaithegi Fri, 13 Jan 2023 7:00:11 PM

அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்

சென்னை: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது மதிய உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை வேளையிலும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நோக்கில் திமுக தலைமையிலான அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது.

இத்திட்டம் மூலம் மாணவர்கள் ஊட்டச்சத்தை பெறுவார்கள். மேலும் பள்ளிகளில் கற்றல் இடை நிற்றல் குறையும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்துமுதல் கட்டமாக காலை உணவு திட்டம் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது.

breakfast scheme,government schools ,காலை உணவு திட்டம், அரசு பள்ளிகள்

தற்போது இத்திட்டம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனால் நடப்பு ஆண்டில் இருந்து அனைத்து அரசுகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags :