Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும்

By: vaithegi Thu, 25 Aug 2022 1:40:21 PM

பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும்

சென்னை: தமிழக அரசின் சார்பாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரைக்கும் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்றுண்டி திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் எந்தெந்த உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனபதற்கான பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை முன்பே வெளியிட்டிருந்தது.

snacks,school students ,சிற்றுண்டி ,பள்ளி மாணவர்கள்

அந்த வகையில் திங்கட்கிழமை காலை ஏதேனும் ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமை ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி ஆகிய ஏதாவது ஒரு கிச்சடியும், புதன்கிழமை வெண் பொங்கல் அல்லது ரவா பொங்கலுடன் காய்கறி சாம்பாரும்,

மேலும் வியாழக்கிழமை ஏதேனும் உப்புமா வகைகளுடன் காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை ஏதேனும் ஒரு கிச்சடியுடன், ரவா கேசரி அல்லது சேமியா கேசரியும், வாரத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|