Advertisement

மலை ரயிலுக்கு முதன்முறையாக பிரேக்வுமன் நியமனம்

By: Nagaraj Fri, 17 June 2022 3:52:21 PM

மலை ரயிலுக்கு முதன்முறையாக பிரேக்வுமன் நியமனம்

மேட்டுப்பாளையம்: பிரேக் வுமன் நியமனம்... உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு முதல் பிரேக்வுமன் பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1899 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மலை ரயில் போக்குவரத்து 2005 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
செங்குத்தான மலை மீது பல்சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருப்பு பாதையில் ஊர்ந்து செல்லும் இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் மலைரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் ஒரு லீடிங் பிரேக் மென் பணியாற்றுவது வழக்கம்.

Tags :