Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க மாட்டோம்... முதல்வர் அறிவிப்பு

ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க மாட்டோம்... முதல்வர் அறிவிப்பு

By: Nagaraj Sun, 10 May 2020 11:18:13 AM

ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க மாட்டோம்... முதல்வர் அறிவிப்பு

சான்ஸே இல்லை. புதுச்சேரியில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் 40 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டன. மக்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்லும் காட்சிகள் வைரலானது. மேலும் பலர் மதுவை அதிகளவு குடித்து சாலைகளில் உருண்டு கிடந்ததும் செய்தியாக வெளியானது.

puducherry,liquor store,curfew,tamil nadu,no opening,announcement ,புதுச்சேரி, மதுக்கடை, ஊரடங்கு, தமிழகம், திறப்பு இல்லை, அறிவிப்பு

இதற்கிடையில் பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினும் மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால் இரண்டு நாட்கள் மட்டுமே கடைகள் திறந்திருந்தன.

இந்நிலையில் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறந்தாள் தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்குள் வர முயல்வர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்ற நிலை உருவானது.

இதற்கிடையில் மே 17 ஆம் தேதி ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Tags :
|