Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணமகனுக்கு கொரோனா பாதிப்பு; திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு; திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

By: Nagaraj Mon, 22 June 2020 10:39:26 PM

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு; திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

மணமகனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர் போலீசார். மணமகன் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, திருமண நிகழ்வு நிறுத்தப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

bride,father,corona,married,terminated ,மணமகன், தந்தை, கொரோனா, திருமணம், நிறுத்தப்பட்டது

இதனிடையே டெல்லியில் வசிக்கும் ஒருவருக்கு உத்தரப்பிரதேச மாநில பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனால் திருமணத்திற்காக மணமகன் குடும்பத்தினர் கடந்த 15ம் தேதி உத்தரபிரதேசம் அமேதிக்கு வந்துள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணத்திற்காக மணமகன் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அதிகாரிகள் செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் திருமண ஊர்வலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். அங்கிருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் மணமகன் குடும்பத்தினர் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மணமகன் மற்றும் அவரது தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமண நிகழ்வை நடத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
|
|
|